Friday, 25 August 2017

விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்ய வேண்டும்?




1. அதிகாலையிலேயே எழுந்து, குளித்துவிட்டு, வீட்டையும் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். முடிந்தால், இரண்டு வாழைக்கன்றுகளையும் வாசலின் இருபுறங்களிலும் கட்டிலாம். பிறகு, பூஜையறையில் சுத்தம் செய்த ஒரு மணையை வைக்க வேண்டும்.

2. அதன்மேல் ஒரு கோலம் போட்டு, அதன்மேல் ஒரு தலை வாழை இலையை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்ததுபோல இருப்பது நல்லது. இந்த இலையின் மேல் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.

3. பூமியிலிருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

4. பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம்.

5. சில வகை    பழங் களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை.

6. பிள்ளை யா  ருக் கு பூக்களால் அலங்காரம் செய்து விட்டு, பிறகு விநாயகர் பாடல்கள் பாடலாம். அவ்வையார் தந்த விநாயகர் அகவல், காரிய சித்தி மாலை படிப்பது விசேஷமான பலன்களை தரும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டை மட்டுமில்லாமல், அவரவர் வசதிக்கேற்ப எள்ளுருண்டை, பாயசம், வடை என்றும் நைவேத்யம் செய்யலாம்.

7. பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் என்று ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம். நிவேதனப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் 21 என்ற கணக்கில் சிலர் வைப்பார்கள். ஆனால், எண்ணிக்கை முக்கியமில்லை, ஈடுபாடுதான் முக்கியம். பிறகு கற்பூரம் காட்டி விரதத்தை முடிக்கலாம்.

8. இந்த விரதத்தை காலையிலிருந்தே உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் அனுஷ்டிப்பது மிகவும் விசேஷம். பூஜை நேரம் வரை பட்டினியாக இருப்பது சிறப்பு. சம்பிரதாயம் பார்க்க கூடியவர்கள் இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிறகும் தொடர்ந்து விரதத்தை அனுசரிப்பார்கள். அப்படித் தொடர்ந்து, பவுர்ணமிக்கு பிறகு வரும் சதுர்த்தி தினத்தோடு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

9. இத்தனை நாள் விரதத்துக்கு பிறகுதான் பிள்ளையாரை கிணற்றிலோ அல்லது ஏதாவது நீர்நிலையிலோ கொண்டுபோய் போடுவது வழக்கம். பதினைந்து நாள் அனுசரித்தாலும் சரி, விநாயகர் சதுர்த்தி அன்றைக்கு ஒரே ஒருநாள் மட்டும் அனுசரித்தாலும் சரி, மேற்கொள்ளும் விரதத்தை உளப்பூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டியதுதான் முக்கியம்.

10. வருடத்திற்கு ஒருமுறை இப்படி விநாயகர் சதுர்த்தி அனுசரிப்பதுபோல மாதந்தோறும் பவுர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளிலும் விரதம் இருப்பது சிலருடைய வழக்கம். அன்றைக்கு முழுவதும் விரதமிருந்து, விநாயகர் சிலை அல்லது படத்துக்கு முன்னால் தீபமேற்றி, விநாயகர் பாடல்கள், ஸ்தோத்திரங்களை பாடி, மாலையில் கொழுக்கட்டை நைவேத்யம் செய்து, பிறகு சந்திர தரிசனம் செய்துவிட்டு எளிமையான உணவை எடுத்துக்கொண்டு விரதத்தை முடிப்பதும் சிலர் வழக்கம்.

11. இந்த விரதங்களால் உள்ளம் மேன்மை அடையும். உடல் ஆரோக்கியம் பெறும். எல்லா வளங்களும் நிறையும். விரதம் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்கள் குடும்பத்தினருக்கும், அவர்களை சார்ந்த அனைவருக்கும் விநாயகர் நல்லன எல்லாம் அருள்வார்.

விநாயக விரதங்கள்.

ஒவ்வொரு ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் வருகின்றன. சுக்கில பட்ச சதுர்த்தியை ‘சதுர்த்தி விரதம்‘ என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்ச சதுர்த்தியை ‘நாக சதுர்த்தி‘. ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை ‘விநாயக சதுர்த்தி‘.மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை ‘சங்கடஹர சதுர்த்தி‘. விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை ‘சங்கடஹர சதுர்த்தி விரதம்‘ என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை ‘சங்கடஹர விநாயக சதுர்த்தி‘ என்று வழங்குவர்.ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் ‘விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான ‘தேவி‘ விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள். அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம்.


விநாயகர் விரதம் இருந்த பார்வதி

ஒரு சமயம் பார்வதி என்ற தாட்சாயணி கணவரை அவமதித்து யாகம் நடத்திய தந்தை தட்சனிடம் நியாயம் கேட்கப் போனாள். ஆனால், தட்சனோ மிகவும் கர்வம் பிடித்தவன். மருமகனை அவமானப்படுத்தியது போதாதென்று, மகளையும் கேலி பேசினான்.இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத தாட்சாயணி, தட்சன் வளர்த்து வைத்திருந்த யாக குண்டத்தில் பாய்ந்துவிட்டாள். அதன்பிறகு, பர்வதராஜனுக்கு மகளாகப் பிறந்து பார்வதி என்னும் பெயருடன் வளர்ந்தாள்.சிறு வயதிலிருந்தே கயிலைநாதன்தான் தன் கணவன் என்று தீர்மானமாக இருந்தாள். அவளுடைய அந்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்றால், அவள் விநாயகரை நினைத்து சதுர்த்தி விரதம் மேற்கொள்ள வேண்டுமென்று அவளுடைய தந்தையார் பர்வதராஜன் யோசனை சொன்னார்.

அவர் சொன்னபடியே, மண்ணால் ஒரு விநாயகர் விக்ரகத்தை உருவாக்கினாள் பார்வதி. கூடவே தங்கத்தாலும் ஓர் உருவம் செய்து இரண்டையும் பொற்கும்பம் ஒன்றின் பக்கத்தில் வைத்தாள். அந்த விக்ரகங்களுக்கு ஆகம விதிப்படி பூஜைகளை செய்தாள். ஆவணி மாத அமாவாசைக்கு அடுத்த சதுர்த்தியில் இப்படி பூஜையை ஆரம்பித்து, பௌர்ணமிக்கு அடுத்த சதுர்த்தி வரையில் தினமும் பூஜை செய்தாள்.அதற்கு பிறகு மண் பிள்ளையாரை, மேள தாளத்தோடு ஊர்வலமாக எடுத்துப் போய் நதியிலே இறக்கி விட்டாள். அந்த பதினைந்து நாட்களும் நியம நிஷ்டைகளை மீறாமல் இருந்த விரதத்தின் பலனாக, தான் ஆசைப்பட்டாற்போல கயிலைநாதனை கைப்பிடித்தாள்
Happy Ganesh Chaturthi 2017





விநாயகர் சதுர்த்தி விழா

அருள்மிகு விநாயகர் 108 போற்றிகள்
1. ஓம் அகரமென நிற்பாய் போற்றி
2. ஓம் அங்குசக் கரத்தாய் போற்றி
3. ஓம் அடியார்க் கெளியாய் போற்றி
4. ஓம் அமரர்கள் நாதா போற்றி
5. ஓம் அறக் கருணையாய் போற்றி
6. ஓம் அறிவானந்த உருவே போற்றி
7. ஓம் அறுகு சூடிய அமலா போற்றி
8. ஓம் ஆதார கணபதி போற்றி
9. ஓம் ஆரண முதலே போற்றி
10. ஓம் ஆணை முகத்தனே போற்றி
11. ஓம் இடர்தனைக் களைவாய் போற்றி
12. ஓம் இடும்பை கெடுப்பாய் போற்றி
13. ஓம் இடையூறு நீக்குவாய் போற்றி
14. ஓம் இமயச் செல்வியின் சேயே போற்றி
15. ஓம் இளம்பிறை போலும் எயிற்றினாய் போற்றி
16. ஓம் ஈசனார் மகனே போற்றி
17. ஓம் உண்மையர் உள்ளொளியே போற்றி
18. ஓம் உத்தமி புதல்வா போற்றி
19. ஓம் உயிரினுக்குயிரே போற்றி
20. ஓம் உய்வருள் பெருமாள் போற்றி
21. ஓம் உலகெலாம் ஆனாய் போற்றி
22. ஓம் உலவாத இன்பமே போற்றி
23. ஓம் உலைவிலாக் களிறே போற்றி
24. ஓம் உள்ளமுயர்த்துவாய் போற்றி
25. ஓம் உள்ளத்தறியில் உள்ளாய் போற்றி
26. ஓம் உள்நிறை ஒளியே போற்றி
27. ஓம் எண்டோளன் செல்வா போற்றி
28. ஓம் எண்ணிய ஈவாய் போற்றி
29. ஓம் எழில்வளர் ஜோதியே போற்றி
30. ஓம் என்னுயிர்க் கமுதே போற்றி
31. ஓம் ஏழைக்கிரங்குவாய் போற்றி
32. ஓம் ஐந்து கரத்தனே போற்றி
33. ஓம் ஒளிபெற அருள்வாய் போற்றி
34. ஓம் ஒற்றைக் கொம்பனே போற்றி
35. ஓம் ஓமெனும் பொருளே போற்றி
36. ஓம் கங்கை வேணியா போற்றி
37. ஓம் கணநாத கற்பக போற்றி
38. ஓம் கணபதிக் களிரே போற்றி
39. ஓம் கயமுகற் கடிந்தோய் போற்றி
40. ஓம் கருவிலும் காப்பாய் போற்றி
41. ஓம் கற்றோர் கருத்தே போற்றி
42. ஓம் கற்பக விநாயகா போற்றி
43. ஓம் காங்கேயன் தலைவா போற்றி
44. ஓம் காலங்கடந்தோய் போற்றி
45. ஓம் காவிரிதரு சீரோய் போற்றி
46. ஓம் கிளரொளி வடிவே போற்றி
47. ஓம் குஞ்சரக் குரிசில் போற்றி
48. ஓம் கூவிள மாலையாய் போற்றி
49. ஓம் கைப்போதகமே போற்றி
50. ஓம் சக்கரந் தரிந்தோய் போற்றி
51. ஓம் சங்கத்தமிழ் தருவாய் போற்றி
52. ஓம் சந்திர சேகரா போற்றி
53. ஓம் சித்தி தேனே போற்றி
54. ஓம் சித்தி விநாயகா போற்றி
55. ஓம் சித்தி புத்தி மணாளா போற்றி
56. ஓம் சிவ கணபதியே போற்றி
57. ஓம் சீர்பெற அருள்வாய் போற்றி
58. ஓம் செல்வக் கணேசா போற்றி
59. ஓம் செல்வமருள்வாய் போற்றி
60. ஓம் செல்வ நீறு தருவாய் போற்றி
61. ஓம் சேமம் தருவாய் போற்றி
62. ஓம் ஞானக் கொழுந்தே போற்றி
63. ஓம் தத்துவ முதலே போற்றி
64. ஓம் தத்துவப் பேறுதருவாய் போற்றி
65. ஓம் நந்தி முகனே போற்றி
66. ஓம் தந்தையாய் காப்பாய் போற்றி
67. ஓம் தழைத்திட வருவாய் போற்றி
68. ஓம் கற்பக விநாயகா போற்றி
69. ஓம் தாரக மறையே போற்றி
70. ஓம் துப்பார் மேனியனே போற்றி
71. ஓம் தொண்டர்தம் துணையே போற்றி
72. ஓம் நச்சினார்க்கினியாய் போற்றி
73. ஓம் நந்திமகனே போற்றி
74. ஓம் நாத முடிவே போற்றி
75. ஓம் நாமவர் பாட்டே போற்றி
76. ஓம் நான்ற வாயினாய் போற்றி
77. ஓம் நிறைவாழ்வருள்வாய் போற்றி
78. ஓம் நூற்பொருள் அளிப்பாய் போற்றி
79. ஓம் நெஞ்சநோய் தீர்ப்பாய் போற்றி
80. ஓம் பகையினைக் களைவாய் போற்றி
81. ஓம் பண்ணிடைத் தமிழே போற்றி
82. ஓம் பண்பிலார்க்கு அரியாய் போற்றி
83. ஓம் பரம தயாளா போற்றி
84. ஓம் பரிதிபோல் மதிதருவாய் போற்றி
85. ஓம் பாதிமதி சூடி போற்றி
86. ஓம் பிணிகள் கழைவாய் போற்றி
87. ஓம் பிரணவக் களிரே போற்றி
88. ஓம் பிள்ளைகள் தலைவா போற்றி
89. ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
90. ஓம் பேழை வயிற்றினாய் போற்றி
91. ஓம் பையரவசைத்தாய் போற்றி
92. ஓம் போத நாயகா போற்றி
93. ஓம் போத வடிவே போற்றி
94. ஓம் மணிநீல கண்டா போற்றி
95. ஓம் மன்றாடி மைந்தா போற்றி
96. ஓம் மாசிலா மணியே போற்றி
97. ஓம் முக்கட் கரும்பே போற்றி
98. ஓம் முடியா முதலே போற்றி
99. ஓம் முத்தமிழ் முதல்வா போற்றி
100. ஓம் மெய்ப்பொருள் நீயே போற்றி
101. ஓம் மோதகக் கையினாய் போற்றி
102. ஓம் யாவு மகனாய் போற்றி
103. ஓம் யோகியர் தலைவா போற்றி
104. ஓம் வல்லமை வல்லா போற்றி
105. ஓம் விகடசக்கர விநாயகா போற்றி
106. ஓம் விண்மழை தருவாய் போற்றி
107. ஓம் வெற்றி திருவே போற்றி
108. ஓம் வைத்த மாநிதியே போற்றி - போற்றி.

Tuesday, 1 August 2017

Srinivasa Kalyanam Set (14 Dolls)



Srinivasa Kalyanam Set (14 Dolls)

The fascinating behind the marriage of Lord Sri Venkatewara(also called Lord Srinivasa) with Goddess Padmavathi is recounted with pictures.The rishis headed by Kasyapa began to perform a sacrifice on the banks of the Gangas.Sage Narada visited them and asked them why they were performing the sacrifice and who would be pleased by it.Not being able to answer the question,the rishis approached Sage Bhrigu.To reach a solution after a direct ascertainment of reality.

Bhrigu first went to Satyaloka,the adobe of Lord Brahma.At Satyloka,he found Lord Bramhma,reciting the four Vedas in praise of Lord Narayana,with each of his four heads,and attend upon by Saraswati.Lord Brahma did not take notice of Bhrigu offering obeisance. Concluding that Lord Brahma was unfit for worship, Bhrigu left Satyaloka for Kailasa, the abode of Lord Shiva.                                     

Video

tubeembed

Popular Posts